Management
Founder
Srimath Swami Atmananda Maharaj
எங்கள் கல்லூரி இணையதளத்திற்கு வருகை புரியும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
பெற்றோர்களுக்கு பெருந்தக்கினிய பெரும் செல்வமாக இருப்பது அவர்கள் ஈன்றெடுத்த அருமை குழந்தை செல்வங்கள் தான் தம் பொருள் என்ப தம் மக்கள் என்பது வள்ளுவம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் சான்றோர்களாக உருவாக்க முயற்சிக்க வேண்டும் சான்றாண்மை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதேயாம்.
” என் கடன் பணி செய்து விடப்பதே ” என்பது அப்பர் வாக்கு ,கடனென்ப நல்லவை எல்லாம்” கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.”
என்பது வள்ளுவம் நாட்டிற்கு நலம் செய்தல் சான்றோர்களின் கடமையாகும் அன்பும் அறிவும் ஆற்றலும் அடக்கமும் இரக்கமும் ஈகையும் வாய்மையும் யாக உணர்வும் உடையோர்தான் சான்றோர் உயர்குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமாய் இருப்பவர் சான்றோர்.
“அன்பு நான் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து சால்வு ஊன்றிய தூண்“
என்பது வள்ளுவம் சான்றோர்களை உருவாக்குதல் தான் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களின் கடமையாக இருக்க வேண்டும் எங்கள் கல்லூரி சான்றான்மையில் சிறந்த மாணவியரை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டுள்ளது.
மனிதன் புரிகின்ற பணிகள் எல்லாம் மிக மிக புனிதமானது உலகமானதும் ஆசிரியர் பணியாரம் ஆசிரியர் பணி தெய்வப்பணி ஈடு இணையற்ற இறை பணி இதன் அருமை பெருமைகளை ஆசிரியர்கள் நன்குணர்ந்து ஆசிரியர்கள் தங்களை தெய்வீகம் மிக்கவர்களாக உயர்த்துக் கொள்ள வேண்டும் குறிக்கோள் இல்லாத கேட்டேன் என்பார் அப்பர் சுவாமிகள் மனித வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் வேண்டும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவியருக்கு உயர்ந்த குறிக்கோள்களை சுட்டிக்காட்ட வேண்டும் உயர்ந்த குறிக்கோள்களை நோக்கி செல்ல தூண்டுதல் தர வேண்டும் வழிநடத்திச் செல்ல வேண்டும் அன்பும் அறமும் செயல் திறனும் ஆசையின்மையும் சிரத்தையும் மிக்கவர்களாக மாணவ மாணவியரை உருவாக்குவதையே ஆசிரியப் பெருமக்களவில் தலையாய கடமொ கடமையாக கொண்டு நமது கல்லூரி செயலாக்கி வருகிறது.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா , தூய அன்னை சாரதா தேவியார் , சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரின் வாழ்வும் ,வாக்கும், ஒவ்வொரு மாணவ மாணவியரது வாழ்வையும் வளப்படுத்தி பண்படுத்தும் என்ற நோக்கத்துடன் கல்லூரி இயங்கி வருகிறது. லட்சிய மாணவிகளை உருவாக்கும் இக்கல்லூரி மென்மேலும் வளர குரு தேவரின் திருவருளும், அன்னையரின் பெருங்கருணையும், சுவாமியின் ஆசியும் உங்கள் அனைவர் மீதும் பொழிய திருமூலரை பிரார்த்திக்கின்றேன்.
இறைவன் தொண்டில்
சுவாமி ஆத்மானந்த மகராஜ்